என் பழைய புத்தக கடையின் முக்கியமான வாடிக்கையாளன் அந்த எழுத்தாளன் .
பெரியாழ்வாரின் திருபல்லாண்டையும், பெரியாரின் சிந்தனை திரட்டுக்களையும் ஒன்றாக வாங்கி செல்லும் வினோதன் அவன்.
வினவினால் " திருவிழா கடைதெருவில் வாங்கிய சிகப்பு கண்ணாடி மாட்டி திரியும் குழந்தையாக விருப்பம் இல்லை " என்பான் .
விளக்கம் கேட்டால் , " ஒரே கொள்கையை சார்ந்த புத்தகங்களை படித்தல், பல வர்ண உலகை ஒரே வண்ணமாக்கி நம்மை ஏமாற்றும் " என்பான்.
என் கடைக்கு எதிரே பழ 'சரக்கு' கடை ஒன்று இருந்தது.
பழ சாரை பழசாக்கி புட்டியில் இட்டு விற்கும் ஒரு வினோத கடை .
கூட்டம் அலை மோதி உள்ளே சென்று போதையில் ஒன்றுக்கொன்று மோதி வெளியே வரும் .
' மூழ்கும் ஓர் ஊர் ' என்ற ஒரு பின் நவீன புதினத்தை படைத்து வந்து என்னிடம் காட்டினான் .
பெருங்கடல் ஆர்பெழுந்து ஒரு நகரை முழுகடிக்கும் பொழுது , அந்த நகரம் மூழ்குவது கூட தெரியாமல் அனைவரும் போதையில் இருப்பதாகவும், இறப்பது கூட தெரியாமல் இருக்கும் உயிர்களை குடிக்க அருவருப்பு பட்ட கடல் , குடித்தவன் எடுத்த வாந்தியை போல், அவர்கள் அனைவரையும் கரையிலேயே துப்பி சென்றதாகவும் எழுதி இருந்தான் .
" இந்த கதையின் இன்னொரு கையெழுத்து பிரதி கிடைக்குமா?" என்று கேட்டேன் .
" இதையே வைத்துக்கொள் , எவனும் பிரசுகிக்க மாட்டேன் என்கிறான் " என்று என்னிடமே கொடுத்துவிட்டு போய் விட்டான்.
நல்ல வருமானம் வரும் கடை என்பதால் அரசே அந்த பழ 'சரக்கு' கடையை வாங்கி விட்டது .
அந்த கடையில் அதன் பிறகு , இரவு ஏழு மணி அளவில் தள்ளாடும் போதையர்கள் துள்ளி ஆட ' குத்து பாடல்களை ' இலவசமாக இரைச்சலுடன் அலற விட , என் கடை வாசலில் நண்பர்களுடன் இலக்கியம் விவாதித்து கொண்டிருக்கும் அவன், தலையில் அடித்து கொண்டு கலைந்து செல்வான்.
" செத்தாலும் நான் குடிக்க மாட்டேன் " என்பான்.
" செத்ததிற்கு பிறகு எவனாலும் குடிக்க முடியாது " என்று சொன்னேன் கிண்டலாய் .
" என் அப்பன் குடித்தான் " என்பான் வெறுப்புடன்.
"ஆறு மணி நேர அரசு வேலையிலும், இருபத்தி நாலு மணி நேர போதையிலும் இருந்த அந்த சத்துணவு சமயல்காரன் , ஒரு நாள் போதையில் என்ன செய்தான் என்று தெரியவில்லை, அவன் உடல் அடுக்கரை தீயில் பாதி எரிந்ததாக செய்தி வந்தது "
" ஓடி பார்க்க சென்ற அம்மாவிடம், அவன் கடைசி ஆசை அவனது கனவு அயல் நாட்டு சரக்கை மூடி திறக்காது அவனுடன் கல்லறையில் வைத்து மூட வேண்டும் என்பதுதான் என்று சொல்லி அம்மாவிடம் சத்தியம் வாங்கிவிட்டு மூச்சை விட்டு விட்டான் "
" உண்டியல் உடைத்து அந்த பாழும் சரக்கு 'பாட்டிலை' வாங்கி அவனுடன் பாடையில் வைத்து, தப்பை அதிர அழைத்து சென்று , 'எரிக்கும்' பழக்கம் உள்ள நாங்கள் அந்த பாதி வெந்த உடலை புதைக்கும் பொழுது , அவனுடன் இருந்த அந்த 'பாட்டில்' என்னை பார்த்து ஏளனமாய் சிரிப்பதாக தோன்றியது "
" மதுவுக்கு அடிமையான மற்றொரு மண்டு குடிக்க காசில்லாமல், என் அப்பன் கல்லறையை அந்த 'பாட்டிலுக்காக' தோண்டியவன் , 'பாட்டிலில்' பாதி சரக்கு இருப்பதை பார்த்து பயந்து , ' இறந்தும் குடிக்கிறான்' எங்கப்பன் என்று ஊரெல்லாம் பரப்பி விட்டு விட்டான். ஏற்கனவே தோண்டி எடுத்து குடித்தவன் பக்கத்து கல்லறையில் இருந்ததால் அவன் சொல்வதை ஊர் நம்பி விட்டது " என்று சொல்லி கதையை முடித்தான் விரக்தியில் .
சில நாள் சென்று, முறுவலுடன் வந்தான் . தன் அம்மா தனக்கு பிடித்தார் போல் ஒரு பெண் பார்த்திருப்பதாக கூறினான்.
சில நாள் சென்று கவலையுடன் வந்தான் . வருங்கால மாமியார் இப்பொழுதே தன் ஏழ்மையை இகழ்வதாக சொன்னான் .
சில நாள் சென்று என் கடை பக்கம் வருவதையே நிறுத்தி கொண்டான் .
அக்கம் பக்கம் விசாரித்ததில் அவன் திரை பாடல்கள் எழுதி வருவதாகவும் . நல்ல புகழும் சம்பாத்தியமும் இருப்பதாக கேள்வி பட்டு அகம் மகிழ்ந்தேன்.
எதிர் கடையில் வழக்கம் போல் 'குத்து பாட்டு' பாடி கொண்டிருந்தது . ஒரு புது பாடல் ஒன்று பாடி கொண்டிருந்தது .
" ரம்மு ரம்மு ரம்முதான் ... ராவா அடிக்கும் நம்ம அண்ணன் சிங்கம் கம்மு கம்முதான்"
" எவன் இதை பாட்டென்று எழுதியது ? " என்று வேடிக்கையாக நான் என் வாடிக்கையாளரை கேட்டேன் .
" ஜின்னு ஜின்னு ஜின்னுத்தான்... நம்ம தலைவன் திருப்பி அடிச்சா வின்னு வின்னு வின்னுதான் " - அடுத்த வரி.
" உங்க நண்பர்தான் " என்று அந்த எழுத்தாளனின் பேரை பெருமையுடன் சொன்னார் அந்த வாடிக்கையாளர் .
அந்த குத்து பாடல் 'வின்னென்று' என் வயற்றில் குத்தியது போல் இருந்தது.
" என்னப்பன் செத்த பிறகும் குடிச்சவன்டா. நான் தொப்புள் கொடியிலேயே சரக்கு அடிச்சவன்டா "
என்ற அடுத்த வரியை வாடிக்கையாளரின் சின்னஞ்சிறிய பையன் பாடலுடன் சேர்ந்து பாட, அதை மிகவும் ரசித்து சிரித்து கொண்டிருந்தார் அந்த அப்பா .