ஒரு எண்பது பக்க கோடு போட்ட நோட்டு .
பக்கங்களை அவள் புரட்ட புரட்ட, நெஞ்சத்தில் ரணம் புரண்டது.
ஒவ்வொரு பக்கத்திலும் அவன் எழுதிய கவிதைகள்.
' முதல் பக்கத்தில் உன் பெயர் எழுது . ' - அவன்.
எழுதினாள்
அவள் பெயருக்கு கீழே எழுதினான் .
' இனி
மற்ற கவிதைகள் | '
அன்று வழக்கமானது என்று புறம் தள்ளிய கவிதை இன்று ஏதோ செய்தது .
"உன் கோவில்
கருவிழி குளத்தில்
குளித்து கழிக்க
பாவங்கள் செய்பவன்
நான் | "
பாவம் என்று எதை சொன்னான் , இருள் அடர்ந்த கோவில் குளக் கரையில், யாருக்கும் தெரியாமல் உயர் ஜாதி பெண்ணாகிய எனக்கு, காமம் குறைந்த உயர் ஜாதி காதலையும் சில கவிதைகளையும் தந்தது பாவம் என்கிறானா .
" 'என்ன சாதி' என்றார்
சாதியில்லா சாதி என்றேன்
'நீ பைத்தியமா?' என்றார்
இல்லை
'நான் காதலன்.' என்றேன் | "
'ஊர் கூடி அடித்ததிற்கும் இப்படி கவிதை எழுதுபவனே என் காதலன் ' என்று நினைத்து கொண்டாள்.
" பெண்ணே ...
தாசி வீட்டில் புணரும்பொழுது
உணராத சாதி,
ஊர் கூடி மணக்கும் பொழுது
மணக்கிறதே | "
படித்தவுடன் கவிதையை அடித்து விட்டாள் . " அசைவம் எனக்கு பிடிக்காது " - என்றாள் .
" உண்மை எப்பொழுது அசைவம் ஆனது? " என்றான் .
உண்மைதான் , சாதி பெயரால் வயிர் வளர்க்கும் அவள் அண்ணன் பற்றிய உண்மை கவிதை அது .
" மனிதனற்ற
அயல் சாதியை கண்டெடுக்க
அண்டம் தாண்டி செல்கிறது
நாசா விண்களன்
'அயல் சாதி' என்னை கண்டெடுத்து
கண்டம் ஆக்க
உயிர் நாச கருவிகளுடன்
தேடி அலைகிறது
பரிணாம வளர்ச்சி அற்ற
ஓர் ' உயர் சாதி ' | "
" ஏன் வந்தாய் . யாரும் பார்ப்பதற்குள் ஓடிவிடு !" என்று அவள் சொன்ன பொழுது அவள் நோட்டை பிடுங்கி சட்டென்று கிறுக்கி விட்டு சென்ற கவிதை அது .
அவன் இப்பொழுது இல்லை . மலை மீதிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டானாம். சொல்கிறார்கள் பாவிகள் .
"ஊர் முன்னாடி அவனுக்காக அழுது நம் சாதியின் மானத்தை வாங்காதே " என்று அவளை ஒரு அறைக்குள் தள்ளி தாளிட்டனர்.
இறந்த பின்னும் எண்பது பக்கத்து நோட்டில் இருக்கும் அவனே துணை .
மீண்டும் மீண்டும் கவிதைகளை புரட்டும் பொழுதுதான் அவள் அதை கண்டாள்.
எல்லா கவிதைகள் முடியும் பொழுது ஒரு கோடு ஒன்று இருந்தது .' | '

ஏன் அந்த கோடு ... வியந்தாள்... கேட்க அவனில்லாததால் அழுதாள் .
அப்பொழுது திறந்திருந்த சன்னல் வழியே 'கல்' ஒன்று விழுந்தது .
வெளியே எட்டி பார்த்தாள். அங்கே அவனின் நண்பன் ஒருவன் அவளை பார்த்து கை அசைத்து விட்டு ஓடி விட்டான் .
அந்த கல்லை சுற்றி ஒரு காகிதம் இருந்தது .
அதை பிரித்தாள்.
அதில் அவளின் 'அவனின் ' கையெழுத்து . நெகிழ்ந்தாள்.
அதில் எழுதி இருந்தது
உன்னை பற்றி நான் சொல்ல விரும்பிய ஒரே கவிதை
" | "
" நீ ஒரு முற்று புள்ளி இல்லாத ஆச்சரிய குறி "
அவள் வெடித்து அந்த காகிதத்தில் முகம் பொதித்து அழுதாள் .
சாதிகளுக்கு புரிபடாத காதல் ஒன்று கண்ணீரோடு சேர்ந்த கவிதையாய் வழிந்து கொண்டிருந்தது .
hiiiii karthik
ReplyDeleteits so difficult to understand that love is above all man created things...(religion/caste/money/name/fame.,.........)
what to do only true souls like u and me can only understand this.....
your !!!!!!!!!!!!!
@ Durga ... 'public' 'public' !? ( anyway you know you are my "|" )
ReplyDelete