" எல்லாமே அரசியல் தான் " - என்றான் என் 'அறிவுஜீவி' நண்பன் .
" அப்போ , காதலும் அரசியலா ?" - காதலில் லயந்திருக்கும் என் 'சாமான்ய' நண்பன் அவனிடன் கேட்டான் .
" சிரிப்பால் வலை விரித்து , அழுகையால் நழுவும் கலை தெரியாத ஆண் உனக்கு, வலையில் மாட்டிய விலாங்காக துடிக்கும் பொழுது விளங்கும் காதலின் அரசியல் " - 'அறிவுஜீவி'.
" நமது தேசிய கொடியில் ஏதேனும் அரசியில் இருக்கிறதா ? " - சமானியத்தை விட குறைவான நான்.
" மூவர்ணமாய் மக்களை பிரித்து நடுவே அரசியல் சக்கரத்தை ஒட்டி கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் கட்சி கொடி அது " - அறிவுஜீவி
" தாய் அன்பில் ஏதேனும் அரசியல் ? " - சாமானியன்.
" உனக்கு மணமான பின்பு உன் மனைவிக்கும் அவளுக்கும் நடக்கும் உள்ளாட்சி தேர்தலின் மோதலில் புரியும் அவள் அன்பின் அரசியல் " - அறிவுஜீவி .
அவனின் வசீகர பேச்சில் மயங்கியே நாங்கள் இருவரும் அறிவுஜீவியின் நண்பர்கள் ஆனோம் .
'"பேச்சு உரிமை மூச்சி உரிமை . அதை ஒடுக்குவதும் கழுத்தை நெரிப்பதும் சமம்" என்பான் .
அவன் கருத்திற்கு மாற்று கருத்து சொன்னால், அவன் தன் குரல் உயர்த்தி , பேச்சின் அழகை இன்னும் மெருகு படுத்தி மாற்று கருத்தை முழுகடிக்க முயற்ச்சிப்பான் .
சில நேரம் தோற்று விட்டால் சில தினங்கள் நம்முடன் ஒழுங்காக பேச மாட்டான் .
அவன் மேல் உள்ள அதீத நேசத்தில் , அவனின் கருத்திற்க்கு மாற்று கருத்து சொல்வதை முற்றுமாக விட்டாகி விட்டது . அதற்கு பின்னரே அவனின் நெருங்கிய நண்பர்கள் ஆனோம், நானும் அந்த சமானியனும்.
சாமானியன் தன் காதல் முறிந்து விட்டதாக சொன்ன பொழுது , தான் முன்பே அவனை எச்சரித்ததாக கூறி சிரித்தான் .
சாமானியன் தன் அறையை சிறை ஆக்கி கொண்டான். உண்ண மறுத்தான் . உணர்ச்சி மரத்தான்.
" ஏதாவது செய் ! " என்றேன் அறிவுஜீவியிடம் .
" இல்லாத கடவுளையும் காதலையும் , கண்டதாகவும் தொலைத்ததாகவும் சொல்லுபவரிடம் எதை சொல்ல !"
என்றான் நையாண்டியுடன் .
" மன நல மருத்துவரிடம் அழைத்து செல்லலாம் " - என்றேன் .
மிகவும் சினம் கொண்டான் . " ஆறு வருட காதலை அரை மணி நேர கதையாய் கேட்டு , ஆழ்ந்து தூங்க ஆறு மாத்தியரை எழுதுவார், மனதை பற்றி மருந்துக்காக மட்டும் அறிந்த மருத்துவர் " என்றான் .
" என்னதான் செய்வது ? " - நான்
" மற்றவர் துக்கத்தில் உன் மூக்கை நுழைக்காது போய் தூங்கு " - என்றான் அறிவுஜீவி .
மனம் கேட்காமல் , சாமானியனை வற்புறுத்தி , ஒரு படம் பார்க்க 'மால்' ஒன்றிர்க்கு அழைத்து சென்றேன்.
நான்காம் மாடியில் இருந்து தாழ்வாரத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்த சாமானியன் என்னிடன் " டிக்கெட் வாங்கி வா, காத்திருக்கிறேன் " என்றான் .
சற்று விலகி செல்வதற்க்குள், காத்திராமல், மேலிருந்து கீழே குதித்து உயிர் தொலைத்தான் .
அதிர்ச்சியில் சில நாட்கள் உறைந்து இருந்தேன். அறிவுஜீவி அந்நாட்களில் என்னிடம் எதுவும் உரைக்காமல் இருந்தான் . என் துக்கத்தில் மூக்கை நுழைக்காமல் இருக்கிறான் என்று நானாக நினைத்து கொண்டேன்.
பின்பு ஒரு நாள்,
அறிவுஜீவி என் அருகே வந்தான். ஆறுதல் கூறுவான் என்று எதிர்பார்த்த என்னிடம் , " அவன் துக்கத்தில் மூக்கை நுழைக்காதே என்றேன் . என் பேச்சை கேட்காமல் கூட்டி போய் அவன் உயிரை எடுத்துவிட்டாயே " என்றான் .
ரணமான மூளையை சரி செய்கிறோம் என்ற பெயரில் பழுக்க காட்சிய கம்பியை கபாலத்தை துளைத்து இறக்குவார்களாம் பழங்கால மனிதர்கள். அப்பொழுது துளைக்கபட்டிவனின் வலியை இப்பொழுது இவன் வார்த்தையை கேட்ட பொழுது உணர்ந்தேன்.
" அழுது கொண்டிருந்தவனுக்கு ஆறுதலாய் ஒரு வார்த்தை கூட சொல்லாதவன் நீ. தீவிர மன சோர்வில் அவன் இருந்த பொழுதும் மருத்துவம் தேவை இல்லை என்று சொன்னவன் நீ. நான் அவன் உயிரை எடுத்தேனா? சொல்லு ! " - அவன் சட்டையை இறுக்கி பிடித்து அழுத்தமாகவே கேட்டேன்.
உதறிக் கொண்டு கோபமாய் வெளியேறினான் .
பிறகு அவன் செய்தது நான் சற்றும் எதிர் பார்க்காதது .
சமூக வலைத்தளம் அனைத்திலும், ஊரெங்கும் " போஸ்ட்டர் " ஓட்டுவதை போல் என்னை பற்றிய 'போஸ்ட்டு'களை போட்டு வைத்திருந்தான் .
ஏற்கனவே மனம் நொந்த நண்பனை , " நீ ஒரு மனநோயாளி , வா மருத்துவரை பார்க்கலாம் " என்று விடாது சொல்லி, வற்புறுத்தி அவன் வேதனையை பன் மடங்காய் அதிகப் படுத்தினேனாம் .
மனோதத்துவும் புரியாது , சோகத்தில் இருக்கும் அவனை , அனைவரும் களிப்போடு சுற்றி திரியும் மாலிற்க்கு அழைத்து சென்று இம்சித்து, அவன் தற்கொலை செய்ய வைத்த மைய காரணியாக என்னை சித்தரித்து இருந்தான்
தனி மனித சோகத்தில், நாகரிகமே இல்லாமல் தலை இடும் என் போன்ற நண்பர்களால் தான் தற்கொலையின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதாக கூறி இருந்தான் .
என்னை கண்டித்து விமர்சனங்கள் என் வலை பக்கத்தில் குவிந்த வண்ணம் இருந்தது .
எல்லாவற்றிலும் அரசியலை பார்ப்பவன் நட்பை மட்டும் விட்டு வைப்பான் என்று எண்ணியது என் மடத்தனமே .
'நண்பனின் மரணத்தை விட நட்பின் மரணம் மிகவும் வேதனையானது' என்று 'முட்டாள்' நான் இங்கு வருந்தும் பொழுது எங்கிருந்தோ வெற்றி சிரிப்பு சிரித்து கொண்டிருப்பான் அந்த 'அறிவுஜீவி' .

No comments:
Post a Comment