ஒர் காலத்தில் அந்த கதை சொல்லியின் கதையை கேட்க இரவு எட்டு மணிக்கு அந்த கிராமமே ஆல மரத்தடியில் ஆர்வமோடு கூடி இருக்கும்.
ரேடியோ பொட்டி வந்த உடன் கூட்டம் பாதி ஆனது. திரை அரங்குகள் அதிகமாக 'கால்' ஆனது. தொலைகாட்சி வந்தவுடன் தொலைந்தே போனது.
கதை சொல்லியின் மனதில் கதைகள் கருவாகி உருவாகி கொண்டே இருக்கும் . கேட்க காதுகள் கிடைக்கும் வரை பிரசவ வலிதான்.
இப்பொழுது பிரசவிக்க காதுகள் இல்லாததால் , மனதுக்குள் முண்டி அடித்து பிறக்க துடித்து கொண்டிருக்கும் கதை குழந்தைகளை சமாளிக்க அவனுக்கு தெரியவில்லை .
நரை விழுந்து விட்டது. வீடுதோறும் பழைய பேப்பரை எடைக்கு எடுத்து பொழப்பு நடத்தி கொண்டான். எட்டு மணி ஆன உடன் தன் வீட்டு சுவற்றில் கரி துண்டினால் வரைய பட்ட மனித உருவங்களுக்கு கதை சொல்ல ஆரம்பித்து விடுவான் .
தனியே பேசுபவனை பைத்தியம் என்று நினைத்த கூட்டம் அதே ஆலமரத்தடியில் கூடி பேசி பட்டணத்தில் இருக்கும் ஒரு மன நல காப்பகத்திற்கு அவனை குண்டு கட்டையாக தூக்கி சென்றது .
" என்ன பிரச்சனை " - மன நல மருத்துவர் .
" தனக்கு தானே பேசிக்கிறான் " - கூட்டம் .
" என்னையா, தனியா இருக்கும் பொழுது யாராவது பேசுற மாதிரி குரல் கேட்குதா ? " - மருத்துவர் .
" கேட்குது , மனசு என்கிட்ட கதை கதையாய் சொல்லும். கேட்க ஆளில்லை . அதான் வீட்டு சுவற்றுகிட்டே சொல்வேன் " - கதை சொல்லி.
" அவனுக்கு என்ன பிரச்சனை ? " - கூட்டம்.
" கிரியேடிவிட்டி " - மருத்துவர் .
"என்ன விட்டியோ கொஞ்சம் சரி பண்ணி அனுப்புங்க" - கூட்டம்.
" நோயுள்ளவனை பேய் பிடிச்சிருச்சின்னு மரத்துல கட்டி வைத்து அடிப்பீங்க . நல்லா இருக்கவனை கூட்டி வந்து வைத்தியம் பார்க்க சொல்லுறீங்களா ? ஒடுங்க எல்லோரும் " - அதட்டினார் மருத்துவர் .
'இந்த டாக்டரே பைத்தியம் போல' என்று முணுமுணுத்த படி கலைந்து சென்றது கூட்டம் .
ஊர் திரும்பி , வீட்டினுள் அமர்ந்து சுவற்றை வெறித்த படி செய்வது அறியாமல் உட்கார்ந்து இருந்தான் கதைசொல்லி .
அப்பொழுது கதவை திறந்து கொண்டு ஒருத்தி உள்ளே நுழைந்தாள்.
சுருங்கிய நெற்றியில் விரிந்த குங்குமத்துடனும், வயோதிகத்தை மெலிதாய் மறைக்கும் ஒப்பனையுடன் அவனை பார்த்து சிரித்தாள் .
" கதை கேட்கலாமென்று வந்தேன் " என்றபடி சுவரில் சாய்ந்து சம்மனமிட்டபடி அமர்ந்தாள் .
அதிர்ச்சிக்கு உள்ளானான் கதை சொல்லி. சுதாரித்து , சற்று பூரித்து, கதை சொல்ல தொடங்கினான் .
கதை முடிந்தவுடன் , சிறு குழந்தையை போல் கை தட்டினாள் அவள் . நாளைக்கும் இந்த நேரம் வருவதாக சொல்லி சென்றாள்.
கதைசொல்லிக்கு, 'அவள்' தன் கதையில் வரும் ஒரு பாத்திரமா?, அல்லது உண்மையானவளா? , என்று ஒரு மயக்கம் வந்தது .
அவள் தன் வாழ்வை அசை போட்ட படியே தன் வீட்டை நோக்கி நடந்தாள்.
சிறுமியாய் இருக்கும் பொழுதே அவன் கதையை கேட்க ஆர்வமாய் முதல் இரெண்டு வரிசைக்குள் உட்கார்ந்து இருப்பவர்களின் ஒருத்தி அவள்.
" கதை சொல்லியைதான் கட்டிப்பேன்" என்று அவள் சொன்ன பொழுது , அவள் அம்மா 'பளார் ' என்று ஒரு அரை விட்டு , ' உன் அப்பா கதைசொல்லியின் கதையையே முடித்திடுவார் . அவரிடம் உளறி வைக்காதே' என்று சொன்னது ஞாபகத்தில் வந்தது அவளுக்கு .
அவள் கல்யாணம் அவளை ஒரு பண்டம் செய்து பரிமாறும் ஒரு எந்திரமாய் மாற்றியது.
எந்திரம் சற்று பழுது அடைந்ததால் , அவளை சொந்த ஊரில் விட்டு சென்றனர் எந்திரமாய் பெத்து போட்ட பிள்ளைகள் . கணவன் இருந்தான் மடிந்தான் என்பதை தவிர்த்து சொல்வதற்க்கு ஒரு கதையில்லை .
பழுது ? ... அவள் காது சற்றும் கேட்காமல் போய் விட்டது !
உறவுகள் அனைத்தும் அற்று போனதும் சுகந்திரமானாள். சுகந்திரம் அடைந்தவுடன் தன் கதை சொல்லி காதலனை தேடி போனாள்.
கண்களால் கதை கேட்டு , ஆன்மாவால் கை தட்டி விட்டு, வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் அவள்.
" காது கேட்காத காஞ்சனா கதைசொல்லி கதவை தட்டி காண்டாமிருகம் கதை கேட்டாளாம் " என்று பகடியாய் அந்த ஊரில் வலம் வந்த பழமொழி , அவள் கதை சொல்லியின் மீது வைத்த காதலை காலம் தாண்டி சொல்லி கொண்டே இருந்தது .

This comment has been removed by the author.
ReplyDeletehi karthik...i was really impressed after reading this.think its worthwhile leaving u alone for night calls.....it really sounds soulful....i am happy about you writing this story.try to bring it out as short film......
ReplyDelete